பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

நேரம் கவனித்துக் கொண்டிருந்ததும்,இதெல்லாம் காமத்தி ணுல் வெறியராகி விட்ட பைத்தியக்கார வாத்தியக்குழு வினரின் கச்சேரி என்றும், மனிதப் பொலி குதிரை ஒன்று மிகப்பெரிய ஆண்குறி தாங்கி, முன்னின்று அதை கடத்தி வைக்கிறது போலவும் தேர்ன்றுகிறது. -

இது தான் ரேடியோ, விஞ்ஞானத்தின் மிக முக்கிய மான கண்டுபிடிப்புகளில் ஒன்று. தோற்றத்தில் ஊமை யான இயற்கையிடமிருந்து விஞ்ஞானம் வலிதில் பிடுங்கிக் கொண்ட ரகசியங்களில் இதுவும் ஒன்று. பக்கத்து ஹோட் டலில் உள்ள ரேடியோ கொழுத்த மனிதர்களின் உலகத் திற்காக, கொள்ளேக்காரர்களின் உலகத்திற்காக சங்கீத விருந்து அளித்துக் கொண்டிருக்கிறது; நீக்ரோ இசைக்குழு ஒன்று நிகழ்த்தும் புதிய காம காட்டிய சங்கீதத்தை அது ஒலி பரப்புகிறது. கொழுத்த மனிதர்களுக்கான சங்கீதம் இது தான். கலாசார காடுகளின் டாம்பிகமான கடன. அரங்கங்களில் எல்லாம், கொழுத்த ஆண்களும் பெண் களும் கூடி புணர்ச்சித் தொழில் புரிவது போல் பாவனே பண்ணி, வெட்கங்கெட்ட செயலில் ஆழ்ந்து, தங்கள் தொடைகளைத் தாளத்திற்கு இணங்க ஆட்டி நெளித்துக் கொண்டிருக்கிருர்கள்.

நினைவுக்கு எட்டாத காலத்திலிருந்து, எல்லா யுகங் களிலும் சகல நாடுகளிலும் உள்ள மகா கவிகள் பலரும் புணர்ச்சியை மேன்மைப் படுத்தும் பணியில் தங்கள் சிருஷ் டித் திறனே ஈடுபடுத்தினர்கள்; மனிதன் தன்னைத் தானே ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றின் தரத்துக்குத் தாழ்த்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவன் மேன்மையை கிலேறுேத்தும் நோக்கத்தோடு அதை அழகு படுத்த அரும்பாடு பட்டார்கள். காதலேப் புகழ்ந்து பாடும் மகத்தான கவிதைகள் நூற்றுக் கணக்கிலும் ஆயிரக்