பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

மனிதன் பலவீனமான ஆணே யாவன். அவனுக்குக் காதல் என்பது சக்தியை வீணுகச் சிதறுவது தான்; கட்டுப் பாடற்ற சதையின் கொதிப்புற்ற உணர்ச்சித் துடிப்பு’ என்ற பழைய கிலே போய், காதல் என்பது கற்பனேயின் வக்கிரப்போக்காக மாறிக்கொண்டே வருகிறது. கொழுத்த மனிதர்களின் உலகத்திலே ஒரு பால் காமம் தொத்து வியாதி மாதிரிப் பரவிக் கொண்டிருக்கிறது. கொழுத்த மனிதரின் பரினமமே சீர்கேடு தான்!

மின்யூயெட் நடனத்தின் அழகு, வால்ட்ஸ் கடனத் தின் உற்சாகம் கிறைந்த உணர்ச்சி ஆகியவை, பாக்ஸ்டி ராட்காட்டியத்தின் காமத்தன்மையாகவும் சார்லஸ்டன்' நாட்டியத்தின் வலிப்பாகவும், மோஸார்ட் பீத்தோவன் ஆகியோரின் இன்னிசை, நீக்ரோக்களின் ஜாஸ் சங்கீத மாகவும் மாறியிருப்பது தான், கொழுத்த மனிதரின் பரினுமம் ஆகும். அமெரிக்க நீக்ரோக்கள் தாங்கள் கடந்து விட்ட கிலேமையை - அவர்கள் மேலும் மேலும் கடந்து சென்று கொண்டிருக்கிற காட்டுமிராண்டித் தனத்தை தங்களின் எஜமானர்களான வெள்ளேயர்கள் பரிமை ரீதியாக எட்டிப் பிடிப்பதைக் கண்டு முகத்தை மறைத்துக் கொண்டு சிரிக்கிருர்கள்!

'கலாசாரம் அறிந்து கொண்டிருக்கிறது!-பாட்டாளி இனத்தின் மீது கொழுத்தவர் செலுத்தும் ஆதிக்கத்துக்குப் பரிந்து பேசுகிறவர்கள் கலாசாரத்தை பாட்டாளி வர்க்கம் த்துவிடப் போகிறது!’ என்று அலறுகிரு.ர்கள். ஆனல் பொய் சொல்லுகிரு.ர்கள். ஏனெனில், உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொழுத்த மனிதர்களின் கூட்டம் தான் கலாசாரத்தை மிதித்துத் துவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் காண்கிரு.ர்கள். கலாசாரத்தைப் பாதுகாப்பதோடு அதை ஆழ்ந்து அகன்ற தாகச் செய்யும் ஆற்றல் பெற்ற சக்தி, பாட்டாளி வர்க்கம் ஒன்று தான் என்பதையும் அவர்கள் உணருகிரு.ர்கள்.