பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழுத்தவர் சங்கீ தம் 47

மனிதத்தன்மை அற்ற மந்தமான குரல் ஒன்று ஆங்கிலச் சொற்களே ஊளேயிடுகிறது. கொடுமைக்கு உள்ளான ஒட்டகத்தின் அலறலே ஞாபகப் படுத்துகிற, ஊது குழல் ஒன்றின் பெருங்கூச்சல் காதைச் செவிடாக்கு இறது. இடியென ஆர்க்கிறது ஒரு முரசு. காதைத் துளைக்கும் இசைக்குழல் ஒன்று வீரிடுகிறது. ஸாக்ஸோ போனின் தவளைக் கூச்சலினல் காதுகள் கிழிபடுகின்றன: கொழுத்த தொடைகள் அசைந்தாடுகின்றன; பல்லாயிரக் கணக்கான கொழுத்த கால்கள் மாறி, மாறி குதியாட்டம் போடுகின்றன.

இறுதியாக, செவிடாக்கும் ஆரோகணத்தோடு, ஆகாயத்திலிருந்து ஒரு பெட்டி இரும்புச் சாமான்கள் உருண்டு, விழுவதல்ை எழும் இடியோசை போன்ற கட கட சத்தத்தோடு, கொழுத்த ழுனிதர்களின் சங்கீதம் நின்று விடுகிறது. மீண்டும் மங்களமான அந்த அமைதி. நினைவுகள் சொந்த நாட்டுக்குத் திரும்புகின்றன. அங் கிருந்து, வாஸிலி குசெர்யாவெங்கோ என்கிற கிராமாந்தர நிருபர் ஒருவர் இப்படி எழுதியிருக்கிருர்:

"ரோஸோவின்ஸ்க் எனும், முந்நூறு வீடுகள் உள்ள எங்கள் கிராமத்தில் முன்பு ஒரே ஒரு பள்ளிக்கூடம் தான் இருந்தது. இப்பொழுது மூன்று இருக்கின்றன. கூட்டுறவு ஸ்டோர் ஒன்று, சங்க அறைகள் மூன்று, சங்கக் கட்டிடம் ஒன்று, வாசகசாலை, புத்தக கிலேயம், கம்யூனிஸ்டுக் கட்சி, இளைஞர் ஸ்தாபனங்கள், இளைஞர் முன்னோடிகள் குழு, விவசாயம், கிராமப்புறம் சம்பந்தமான நிருபர் தொழிற் பயிற்சித் திட்டங்கள், சுவர்ப் பத்திரிகை ஒன்று - இவ் வளவும் உள்ளன. எங்கள் கிராமவாசிகள் புத்தகங்கள் வரவழைக்கிருர்கள். பல செய்திப் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் சங்தா செலுத்துகிருர்கள். மாலே வேளே களில் சங்கக் கட்டிடம் நிறைந்து காணப்படும். வயது .