பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறந்த புத்தகம் 57

யுத்தத்தின் சர்வசாதாரண அன்ருட வாழ்க்கைகியதி பற்றி பார்புஸ்ஸே எழுதியிருக்கிருர், அதை ஒரு வேலை என்று, குற்றமற்ற மக்கள்-மக்தபுத்தி யுடையவர்கள் என்ற ஒரு குறைபாட்டைத் தவிர இதர எல்லா விஷயங் களிலும் குற்ற மற்றவர்கள்-தங்களேத் தாங்களே அழித் துக்கொள்ளும் இழிவான வேலே என்று அவர் சித்திரிக் கிரு.ர். கவிதா மயமான, வீரம் மிகுந்த, யுத்த சித்திரங்கள் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை. தனிப்பட்ட வீரர் களின் சாகசங்களைக் கூறும் வர்ணனைகளும் இல்லை. பார்புஸ்ளேயின் புத்தகத்தில் உண்மையின் அழுத்தமான கவிதை நிறைந்திருக்கிறது. மக்களின் வீரத்தை வர்ணிக் கிறது அது நாடுகளுக்கிடையே சண்டையைத் தாண்டுகிற மகா சக்தியான மூலதனத்தால் சாவையும் அழிவையும் நிச்சயமாக அடைகிற ஆயிரம் ஆயிரம் மக்களின் லட்சோப லட்சம் மக்களின், வீரத்தைச் சித்திரிக்கிறது. இந்தப் பிசாசு தான் - கமது மத்தியிலே தோற்கடிக்க முடியாத வகையில் செயல்புரிந்து கொண்டிருக்கிற முழு உண்மையான இந்தப் பேய் தான்(மூலதனம்)பார்புஸ்ஸ்ே புத்தகத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஆகும். அவர் களுடைய மனோபலத்தை அமுக்கி, அவர்கள் உள்ளத்தை, பேராசை, பொருமை, துராசை முதலியவற்றின் விஷத் தால் கிரப்பி. நாசப்படுத்தும் எண்ணங்கள் கொள்கைகள் ஆகியவற்றின் போலிப் பளபளப்பால் கோடிக்கணக்கான பாமர மக்களேக் குருடர்களாக மாற்றிவிட்டது மூல தனம் என்னும் பிசாசு. அதன் பிறகு அது அவர்களே பிரான்ஸின் வளம் மிகுந்த வயல்களுக்குள் ஒட்டியது. அங்கே அநேக தலைமுறைகளின் கடும் உழைப்பால் சிருஷ்டிக்கப்பட்டிருந்த அனைத்தையும் அவர்கள் நான்கு வருஷ காலத்தில் அழித்துப் பாழ்படுத்தி விட்டார்கள். அதன் மூலம், மனிதனுடைய மகாமோசமான விரோதி மைேபலக் குறைவும் அறிவின்மையுமே யாகும் என்பதை