பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

அவர்கள் மற்றும் ஓர் முறை தமக்குத் தாமே கிரூபித்துக் கொண்டார்கள். - பார்புஸ்ஸ்ே, தனக்கு முன்னிருந்த எவரையும் விட அதிகமாக, யுத்தத்தின் இயல்பு பற்றி ஆழ்ந்து கவனித்து, மக்கள் தம்மைத் தாமே எவ்வளவு தூரம் ஏமாற்றிக் கொண்டிருக்கிருர்கள் என்பதைக் காட்டியிருக்கிரு.ர்.

பொய், பாசாங்கு, கொடுமை, அழுக்கு, ரத்தம் ஆகிய குவியல்கள் ஒருமிக்கச் சேர்ந்தே யுத்தம். அதன் மீது விழும் உண்மை எனும் சம்மட்டியின் அடிதான் இந்நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படுகிறது. இது ஒரு சோக மயமான நூல்; உண்மையை ஆணித்தரமாகக் கூறும் நூல். ஆனல், இதன் வர்ணனையில் படிந்துள்ள வியாகுலத்தின் ஊடே புதியதோர் மன விழிப்பின் சிறு சுவாலேகள் பிரகாசிக்கின்றன. இச்சுவாலைகள் உலகம் முழுவதும் பரவக்கூடிய பெருந்தியாகப் பொங்கி எழுவதற்கு இன்னும் வெகுகாலம் ஆகாது; மூலதனம் எனும் பேயில்ை சிருஷ் டிக்கப் பட்டுள்ள அழுக்கை, ரத்தத்தை பொய்யை, பாசாங்கை எல்லாம் எரித்து, பூமியை அது சுத்தமாக்கி, விடும் என்ற கம்பிக்கை கமக்கு இருக்கிறது. பார்புஸ்ஸ்ே எந்த மக்களைக் குறித்து எழுதியிருக்கிருரோ அவர்கள் இதற்குள்ளாகவே மனிதன் மீது கடவுளுக்கு இருக்கும் ஆதிக்கத்தைத் துணிவுடன் மறுக்கத் தொடங்கி விட்டார் கள். சகோதர மனிதர்கள் மீது இன்னொரு மனிதன் செலுத்துகிற ஆதிக்கம் எவ்வளவு குற்றமானது, வெறுப் பூட்டுவது என்பதை அவர்கள் வெட்கத்தோடும் கோபத் தோடும் சீக்கிரமே புரிந்து கொள்வார்கள் என்பதற்கு இது ஒரு நிச்சயமான அறிகுறி. -

துன்பகரமான காலத்தில் நாம் வசிக்கிருேம். வாழ்க்கை சகிக்க முடியாத அளவுக்குக் கொடுமையான தாக இருக்கிறது. ஆயினும், மனிதனுள் உறையும் கல்ல