பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும்

பத்தொன்பதாம் நூற்ருண்டை முற்போக்கு யுகம்’ என்று உயர்வாகவும் பெருமையாகவும் அழைக்கிருர்கள். அது பொருத்தமானது தான். ஏனெனில், அந்தக் கால கட்டத்தில் தான் அறிவும், இயற்கையின் தன்மைகள், நிகழ்ச்சிகள் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியும், அதன் அடிப்படைச் சக்திகளைப் பொருளாதார நலன்களுக்குப் பயன்படுமாறு கட்டுப் படுத்தும் முயற்சியும், முன் எக் காலத்திலும் இல்லாத வகையில் மிகவும் உச்ச கிலேயை அடைந்தன. தொழில் முறை அற்புதங்கள்' பலவற்றையும் உற்பத்தி செய்துள்ளன. தாவரங்கள், மிருகங்கள் முதலியவற்ருேடு தொடர்பு @_@ð) –ll ! நுண்ணுயிர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து, கண்ணுக்குப் புலனுகாத நோய்க் கிருமிகளின் தனி உலகம் பற்றிய உண்மைகளே மனிதனது அறிவு கண்டு பிடித்தது. - இங்த ஆராய்ச்சி முற்றிலும் பயன்படுத்தப்படவில்லை. சமுதாய அமைப்பு முறைகளின் காரணமாக வளர்ந்துவிட்ட வெட்க கரமான, குறைகூறும் குணமுடைய, பழமை மோகம் தான் இதற்குக் காரணமாகும்.