பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - மாக்லிம் கார்க்கி கட்டுரைகள்

பைரனும் லியோபார்டியும் அந்தக் கருத்தைப் புதுப்பித்த தற்கு உரிய காரணமாகும் என்பது கொஞ்சமும் சரியல்ல. ஆனுல்,பிரபுத்துவத்தின் கிலத்தோடு சேர்த்து அதனுடைய எண்ணங்கள் சிலவற்றையும் முதலாளிகள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது சொல்லாமலே புரிந்து கொள்ளக் கூடியதாகும். ஏனெனில், அவை பிறப்பதற்கு ஏதுவாக அமைந்த கிலேமைகள் அழிந்தாலும், தாம் அழியாது கின்று மற்றவைகளைப் பாழ்படுத்தக் கூடிய சக்தியை எண்ணங்கள் பெற்றிருக்கின்றன. -

அசைக்க முடியாத பழமைப்பற்றுதான் இந்தத் தத்துவத்தின் ஊன்று கோல் ஆகும். உயிர் வாழ்வதின் அர்த்தமற்ற தன்மையை அழுத்தமாக எடுத்துச் சொல்வதன் மூலம், ஆழ்ந்து நோக்கும் பண்பு அற்றவரின் இதயத் தேவைகளே அது திருப்திப் படுத்துகிறது. அமைதியை ஆர்வத்தோடு நாடுகிறவர்களுக்கு அமைதி அளிக்கிறது. இக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களின் கூட்டம் மிகமிகச் சிறியது; குறுகிய எல்லேக்குள் இடுங்கியது; இக்கூட்டத்தில் சுய சிந்தனையோ, எண்ணத் துணிச்சலோ வளமாகப் பெற்றவர்களும் இல்லே. இத் த்துவத்தின் பிடிவாதப் பண்பே இதற்குக் காரணமாகும்.

பத்தொன்பதாம் நூற்ருண்டில் நம்பிக்கை வறட்சி யும் இருள் நோக்கும் உடைய கருத்துக்களே ஐரோப்பாவில் பரப்பி வளர்ப்பதில் ஜெர்மனியர்தான் சலியாதவர்களாக விளங்கினர்கள். ஷோபனுர், ஹார்ட்மேன் ஆகியோரது புத்தமத தத்துவப் பிரசாரம் இருக்கட்டும். மாக்ஸ் ஸ்டர்னர் என்கிற அராஜகவாதி, உண்மையில் தாம் அழுத்தமான இருள்நோக்குக் கொள்கையினர் (பெளி மிஸ்ட்) என்பதைத் தமது கான் எனும் உணர்வும் eaforg/ o ap Goldusth' (The Ego And His Own) Grøth புத்தகத்தில் தெளிவு படுத்தினர். பிரடரிக் நீட்ஷே