பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

உலக ஞானம் பெறுவதினின்றும் என்னேத் திருப்பி விடு கிறது என்பதை நான் உணர்ந்த போதிலும், கான் நடுவு கிலே முறையையே கையாண்டு வங்தேன்.

இயல்பாகவே ஒன்றுக்கொன்று ஒவ்வாத முறையில் உள்ள பல விஷயங்களேயும், ஒருமைப்படுத்த முடியாது போனலும் கூட, குறைந்த பட்சம் சமாதான கிலேயிலாவது சேர்த்து வைக்கலாமே என்று பெரும்பான்மை மக்களி டத்தில் சகஜமாகக் காணப்படுகிற ஒரு தூண்டுதலே இந்த மனோபாவத்தின் அடித்தளத்தில் உறைகின்றது; இதைக் கிரகிப்பது கடினமாகும். ஒத்துப் போகும் சித் தாக்தம் கண்டுபிடிக்கப்பட்ட காட்டில் உள்ள மக்கள் இதை நன்கு உணர வேண்டும். ஆனால் அங்கோ ஒரு சில அறிஞர்கள்-வாழ்வின் ரகசியங்களேத் தெளிவு படுத்தும். கிபுணர்கள்-மட்டுமே, 1914-18 ஆண்டுகளில் நிகழ்ந்த இழிவான யுத்தத்துக்குப் பின்னர், முரண்பாடுகளைப் பொருத்தி வைக்க முடியாது; அவற்றின் காரணங்களைத் தேளிவு படுத்தும் ஆராய்ச்சிதான் தேவை என்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிருர்கள்.

ஜார் கால ரஷ்யாவில் வசித்த தொழிலாளி, விவசாயி ஆகியோருடைய வாழ்க்கை, ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கையோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு மிகவும் கடுமையாக இருந்தது என்று நான் உறுதியாகக் கூறுவேன். ரஷ்யாவின் தொழிலாளி வர்க்கம் மிகுதியும் அடிமைப்படுத்தப்பட்டு அறியாமை கிலேயில் அவதியுற்றது.

மனித உள்ளத்தின் மீதும், அறிவின் மீதும் அரசாங் கமும் மதமும் பிரயோகித்து வந்த ஆதிக்கம் ஐரோப் பாவை விட ரஷ்யாவில் அதிகக் கொடியதாக இருந்தது. ரஷ்யாவில் அழிந்துபட்டதைப் போல வேறு எங்த இடத்