பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 x. மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

பண்ணே அடிமை முறையை-அகற்ற வேண்டிய காலம் வந்து விட்டது என்பதை எடுத்துச் சொல்லி ஆட்சியினரை வற்புறுத்தக் கூடிய சக்தி தான் அப்பொழுது தேவையாக இருந்தது. இந்த ஆதிகால மனிதாபிமானப் பிரசாரம் பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பாதியில் தோன்றிய முதலாளித்துவ அறிஞர்களால் தொடர்ந்து கையாளப் பட்டது, இவர்களும் ரஷ்ய விவசாயியைத் துர்கனேவும் டால்ஸ்டாயும் மற்றவர்களும் சித்திரித்துக் காட்டியது போலவே, பிரகாசமும் துண்மையும் கிறைந்த வர்ணங் களில் சித்திரித்தார்கள். மேலும் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய உழைப்பாளி தேவையிருந்ததால் தான் விவசாயி விடுதலை அடையவேண்டும் என்று செல்வச் சீமான்கள் ஆசைப்பட்டார்கள். எதேச்சாதிகார ஆட்சி யோடு கிகழ்த்தும் போராட்டத்தில் விவசாயியின் வலிமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கோக்கத்தோடு தான் முதலாளிகள் அவனது விடுதலேயை விரும்பினர்கள், .

பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதியில் தொழில் அபிவிருத்தி ஏற்படவும், முதலாளிகளிடையே "சட்ட பூர்வமான மார்க்ளிய வாதிகள்” தோன்றினர்கள். முதலாளி வர்க்கத்தினரால் பழக்கி வளர்க்கப்படும் விட்டுப் பறவை இனத்தில் ஒரு இனம்தான் இவர்களும்; ரோம் நகரத்தைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படும் வாத்துக்களே ஒத்தவர்கள் தான் இவர்கள். காவியக் சித்திரமான” விவசாயியை பாக்டரியாகிய கொதிக்கும்

ఫ్రో கொப்பரையில்” போட்டு சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் என்று இவர்கள் பேசினர்கள். அந்தச் சந்தர்ப் பத்தில் தான் எதேச்சாதிகார அரசாங்கம், 'காலத்தின் அதிகாரக் குரலுக்கு இணங்கி மாதா கோயில் பிரதேசம் தோறும் பள்ளிக்கூடங்கள் அமைத்தது. 'லெம்ஸ்ட்வோ?