பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

தீயிட்டுக் கொளுத்தவும் இடித்து நொறுக்கவும் ஆரம்பித் தான். ஆனால், அவன் தொழிலாளிகளே-வேலை நிறுத்தம் செய்தவர்களே - சந்தேகத்தோடும் அதிக கம்பிக்கை இல்லாத மனத்தோடும் தான் கவனி த்து வந்தான். எனினும், 1917-ல் தொழிலாளி வர்க்கம் பற்றிய உண்மையை அவன் உணர்ந்து கொண்டான். அப்பொழுது அவன், தனது துப்பாக்கிச் சனியனே (பயனெட்) தரையில் ஊன்றிக் கொண்டு, ஜெர்மனியில் உள்ள தொழிலாளர் களேயும் விவசாயிகளையும் அழிக்க மறுத்து விட்டான் என்பதை நாம் அறிவோம். - . . . .

ஜெர்மானிய ராணுவம், வெற்றி பெற்ற உரிமை' என்ற சாக்கில் ரஷ்ய விவசாயியைப் பூரணமாகக் கொள்ளையடித்தது. அவனது விசித்திரப் போக்கினுல் ஆத்திர மூட்டப்பட்ட ஐரோப்பிய முதலாளிகள், அடக்கு முறையை எதிர்த்துக் கிளம்பி விட்ட ரஷ்யர்களே ஒடுக் கவும் அழிக்கவும் தங்கள் விவசாயிகளேயும் தொழிலாளி களையும் அனுப்பினர்கள்.இதையும் காம் அறிவோம்.இந்தக் கொடும் பாதகச் செயல் ரஷ்யாவில் மிதவாதிகளாகவும் திவிரவாதிகளாகவும் விளங்கிய அறிஞர்'களில் பெரும் பான்மையினரின் ஆதரவைப் பெற்றிருந்தது. அவர்கள் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கக் கிளம்பி யிருந்தார்கள்; சோவியத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக மறைமுகமான வேலைகள் செய்தார்கள். அதற்கு எதிராக சதித் திட்டங் கள் வகுத்தார்கள். தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியோரின் தலைவர்களுக்கு எதிராக பயங்கரமான நட வடிக்கைகளில் ஈடுபட்டார்கள். லெனின் மீது சுடப்பட்ட குண்டு தங்களுடைய உண்மையான கண்பரும் தலைவரும் யார் என்பதைத் தொழிலாளி, விவசாயி மக்களுக்களுக்கு எடுத்துக் காட்டியது; அவர்களுடைய எதிரிகளின் படு மோசமான அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தியது: