பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 84

வாலிபன் ஒருவன். அவனது கற்பனையைக் கிளறி, உள்ளத் தில் விழிப்பு ஏற்படுத்தி. அங்கு உறைகின்ற காட்டுத் தன. மான பூர்வீக மூட நம்பிக்கைகளையும் தப்பெண்ணங்களே யும் களைந்தெறியக் கூடிய விளைவுகள் கிறைந்த விசேஷ உலகத்தில் தான் இருப்பதாக அவன் உணருகிருன் மிகுதி யும் சிக்கல்கள் கிறைந்த இயந்திரங்கள், அவை சம்பந்தப் பட்ட இயந்திரக் கருவிகள், ஆகியவற்றில் பரிணமித்து விளங்குகின்ற அறிவின் வேலைப்பாடுகளே அவன் பார்க்கிருன். அனுபவம் இல்லாத காரணத்தால் அவன் எதையாவது பழுதாக்கி விடுவான் என்பதில் சந்தேக மில்லை. ஆயினும், பொருள்களுக்கு அவன் விளேவிக்கிற கேட்டுக்கு ஈடு செய்து விடுகிறது அவனுடைய அறிவில் ஏற்படும் வளர்ச்சி. அந்தத் தொழிற்சாலேயின் எஜமானர் கள் தன்னை ஒத்த தொழிலாளிகளே என்பதையும், அங்குள்ள இளம் இன்ஜினியர் ஒரு தொழிலாளி அல்லது விவசாயியின் மகன்தான் என்பதையும் அவன்காண்கிருன். அவனது விசேஷத் திறமைகள் யாவும் தாராளமாக வளர்ந்து பிரகாசிப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பள்ளிக்கூடம் தான் அந்தத் தொழிற்சாலை என்கிற நம்பிக்கை அவனுக்கு வெகு சீக்கிரத்திலேயே உண்டாகி விடுகிறது. அவன் விசேஷமான திறமை பெற்றிருந்தால், தகுந்த உயர்நிலைக் கல்வி ஸ்தாபனங் களுக்கு அவனே அத் தொழிற்சாலே அனுப்பி வைக்கும். ஆல்ை, இதற்குள்ளாகவே அநேகம் தொழிற்சாலைகள் தங்களுக்கென்று சொந்தமாகவே தொழிற் கலக் கல்வி கிலேயங்களே அமைத்துக்கொண்டு விட்டன. உலகத்தின் அற்புதங்களே எல்லாம் ஆராய்ந்து அறிந்து கொள்ளு ம் ஆற்றலை உள்ளடக்கிய அவனது மூளை நரம்புகளங்க சக்தி இப்பொழுது வலிமையுடன் இயங்குகின்த குழ்கிலே அவன் தந்தைக்கு இல்லவே இல்லே