பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்துவம் 91.

உண்மையான மனித அன்பு ஒரு கிருஷ்டி சக்தியாக ஸ்தாபன வடிவம் பெறுகிறது. சிறுபான்மையினரின் மனிதத்தன்மையற்ற, அற்பத்தனமான ஆதிக்கத்திலிருந்து கோடானுகோடி உழைப்பாளி மக்களே விடுவிப்பதைத் தனது நோக்கமாகக் கொண்டுவிட்டது. அது. உடல் உழைப்பினல் வாழ்கின்ற கோடானுகோடி மக்களிடம் அது கூறுகிறது: கலாசாரத்தின் பொக்கிஷங்களே எல்லாம் உருவாக்குவது உங்களுடைய உழைப்பேயாகும்; அப் பொக்கிஷங்கள் அனைத்தையும் பயன்படுத்தி உலகம் முழு மைக்கும் பொதுவான புதிய சோஷலிஸ் கலாசாரத்தைப் பாட்டாளி மக்கள் சிருஷ்டிக்க வேண்டும்; அது தான் உலகத்தில் உள்ள தொழிலாளி மக்களுக்கிடையே சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் கிலேகாட்டும்.”

பாட்டாளி வர்க்க மனிதத்துவம் என்பது பகற்கனவு அல்ல; வெறும் கொள்கையும் அல்ல. அது சோஷலிஸ் சோவியத் யூனியனில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினரால் உருக்குப் போன்ற உறுதியோடு, துணிகரமாயும் வீரத் தன்மையோடும் அனுஷ்டிக்கப்பட்டு வருவது. முன்பு முதலாளிகளையும் விவசாயிகளேயும், காட்டுமிராண்டிகளை யும் கொண்டிருந்த ரஷ்யாவில் - எண்ணற்ற தேசிய, இனப்பகுதிகள் மிகுந்திருந்த ரஷ்யாவில் - இப்பொழுது சகோதரத்துவமும் சர்வ தேசிய சமத்துவமும் உண்மை, யாகவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இது கிரூபிக்கப்பட்ட விஷயமாகும். ஏராளமான மக்களின் உடல் சக்தியை, அறிவின் ஆற்றலாக மாற்றும் முயற்சி உண்மையாக:ே ரஷ்யாவில் பெருகி வருகிறது. இதை யாரும் மறுக்க முடியாது. .

தொழிலாளி வர்க்கத்தின் புரட்சி உ. வதைத் தடுக்கும் நோக்கத்தோடு எல்லா உள்ள முதலாளிகள் என்ன செய்கிருர்கள்: