பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

கோடானுகோடி உழைப்பாளி மக்கள் கொண்டுள்ள ஆதிக்கத்தை கிரந்தரமாக கிலே நிறுத்தவும், உழைப்பை அர்த்தமற்ற முறையில் சுய லாபத்துக்காகப் பயன் படுத் தும் தங்களுடைய சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், தங்கள் சக்தி அனைத்தையும் செலவிட்டுப் பாடுபடுகிற முதலாளிகள் பாசிசத்தை உருவாக்கிக் கொண்டிருக் கிருர்கள். பலவீனப்படுத்தப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தில், உடல் கிலேயிலும் ஒழுக்க முறையிலும் சீர்கெட்ட பகுதியினரை எல்லாம் ஒன்று சேர்ப்பதும் படை திரட்டுவதும் தான் பாசிசம் ஆகும். குடிகாரர்கள், மேகநோய் பற்றியவர்கள் ஆகியோரின் இளம் சந்ததிகளை யும், 1914-18ம் ஆண்டு யுத்தத்தின் கினேவுகளால் சித்தம் குலேந்த பிள்ளைகளேயும், கடுத்தர வர்க்கத்தினர் மக்களையும், தோல்வியடைந்தவர்களையும் சேர்த்துப் படை திரட்டுகிற முயற்சிதான் பாசிசம். இவ் இளைஞர்களின் மனப் பண்பை பின் வருவன போன்ற நிகழ்சிகள் கன்கு எடுத்துக் காட்டும்: 'இவ் வருஷம் மே மாத ஆரம்பத்தில், ஜெர்மனி யில் உள்ள எஸ்ஸன் ககரத்தைச் சேர்ந்த ஹீன்ஸ் எனும் பதினுன்கு வயதுச் சிறுவன் தனது நண்பனை பிரிட்ஸ் வாக்கன்ஹோர்ஸ்ட் என்கிற பதின்மூன்று வயதுப் பையனேக் கொன்று விட்டான். அவன் முன்னேற்பாடாக நண்பனுக்காக ஒரு சவக்குழி தோண்டி வ்ைத்திருந்ததாக வும், பிறகு அவனே உயிரோடு அதில் பிடித்துத் தள்ளிய தாகவும், அவன் மூச்சு முட்டிச் செத்துத் போகிற வரை யில் அவனுடைய முகத்தை மணலோடு சேர்த்து அழுத்திய தாகவும் அந்தக் கொலேகாரன் அமைதியோடு விவரித்தான். ஹிட்லரின் அதிர்ச்சிப் படைக்கு உரிய ராணுவ உடுப்பு வாக்கன்ஹோர்ஸ்டிடம் இருந்தது; அதைக் கைப்பற்றிக் கொள்ள ஆசைப்பட்டுத்தான் அவனேக் கொல்ல நேரிட் டது என்றும் அவன் அறிவித்தான்."