பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரும் அதியமானும் 台盒 வின்றி அளித்து, உணவிற்கு செல்லும் சிறந்த ஆடைகள் பல வும் கொடுத்து உபசரித்தான். உடனே ஒளவையார் உவந்து, 'இத்தகைய வண்மையாள&னப் பரிசில் சீட் டித்தானென்று முனிக்தோமே!’ என்று மிக வருந்தித் தம் மனத்தோடு கூறு பவராய், 'அதியமான், ஒரு காளல்ல, இரு நாளல்ல, பல 5ாளும் பலரோடும் செல்லினும், முதல் நாள் கண்ட போது கொண் - அன்பிற்சி நிதங் குறையாத அன்பையே உடையான் இவன் பரிசில் ட்ேடிப்பினும், நீட்டியாதொழியினும் யானே கையில் எடுத்த கவளம் வாயினுட்செல்லுதல் தவருததுபோல, இவன் கமக்குப் பரிசில் தருதல் தப்பாது,” என்று, அவன் பழகியோ விடத்து என்றும் ஒரு தன்மையாகக் கொள்ளும் அன்பையும் அருமையையும் மிகுத்துக் கூறி, வண்மையை வாழ்த்திப் புகழ்ந்து, அவனது மனேயின் கண்ணே தங்கியிருந்தனர். இங்ங்னம் இருக்குங்கால் ஒரு நாள் அதியமான் ஒரு மலேப் பக்கத்துக்குச் சென்றிருந்தவன், அம்மலையின் பிளவிலிருந்த ஒரு கருநெல்லி மரத்திற் பழுத்து விளங்கிய கனியொன்றைக்கண்டு அதனை அரிதின் முயன்று பெற்ருன். அவன், அதனே உண்ட வர் நெடுங்காலம் உயிர் வாழ்வார் என்றறிந்தும், அக்கனி யைத் தானுண்டு உயிர் வாழ்வதினும், தமது காவன்மையால் சீரிய பாக்கள் இயற்றி உலகை இன்புறுத்தும் ஒளவையார்க் கீதலே சாலப்பயனுடையதெனக் கருதி, அக்கனியின் பெருமை யைக் கூருமலே புலவர்க்குக் கொடுத்து, உண்ணும்படி செய் தான். உண்ட ஒளவைப்பிராட்டியார், பின்னர்க் சனியின் விசேடத்தை உணர்ந்து, அதியமான் தன்னினும் தம்மையே மேம்பட மதித்துத் தாம் சாவாது நெடுங்காலம் வாழ்ந்திருக்கக் கருதியதற்கு வியந்து, அவனே நோக்கி, 'வீரச் செல்வமுடைய அதிடர் கோமானே, பெரிய மலையுச்சியிற்பெற்ற அமிழ்த மான இனிய கெல்லிக்கனி பெறுதற்கரியது என்று கருதாமலும் அதன் பயனே வெளிப்படக் கூருமலும் மறைத்துச் சாதல் நீங்க எமக்கு அளித்தாயாதலால், நீ சந்திர மவுலியும் லே கண்டனு: மாகிய சிவ பெருமான் நஞசையுண்டும் கிலே பெற்றிருப்பது போல, கெடுங்காலம் கில்பெற்று வாழ்வாயாக!” என்ற கருத்த மைத்து, ஒரு செய்யுளைப் பாடிவாழ்த்தினர். பின்பு அவனுக்கு உயிர்த் துணையாய்ச் சிறந்து, அஞ்சியுடனிருந்து அவனது