பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரும் அதியமானும் §y அதியமான் முன் சென்று, பெருக்தகாய், பெருஞ்சமர் புரிந்து கீ விழுப்புண் பட்டபடியால், உன்ளுேடு எதிர்த்த அரசர் பலர், தங்களுக்கு யுத்தத்தில் இறவாமையால் உளதாகும் குற்றம் நீங் கும்படி இப்போது உன் வாட்போரில் மாண்டனர். இனி ே வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது யாதுளது :” என்று பின்னரும் அவனே ஊக்கினர். அதியமான், அப்புண்பட்ட கிலேயிலும் தளராது போர் புரிந்தான் ; இறுதியில் பெருஞ்சேரல் விடுத்த வேலொன்று, காற்றினுங் கூற்றினுங் கடுகி வந்து, அதியமான் அஞ்சியின் கெஞ்சிற்பாய்ந்து, ஊடுருவிச் சென்றது. அதனல், அதியமான் சோர்ந்து தேரிற்சாய்ந்து உயிர் துறந்தான். அக்தோ அவ்வடி பத்து அவனுக்கு இன்னுயிர் கண்பரான ஒளவையார் எய்திய கெளவையை எங்ங்ணம் கூறுவது புலவர் அவன் இன்குணங் களே எல்லாம் சினந்து கினைந்து வருக்திப் பிரிவாற்ருது புலம்பு கின்றவராய், சோறு எல்லார்க்கும் பொதுவாதலால், அது சிறு அளவினதாக உள்ளபோதும், மிகப் பல கலத்தோடும் பலரோ டுங்கூட உண்பான் ; அது கழிந்ததே ! மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பலரோடுங்கூட உண்பான் ; அது கழிந்ததே உணவிருக்கும் இடமுழுதும் எங்களுக்கு (உண்டு களிக்க) அளிப்பான்; அது கழிந்ததே! அம்பும் வேலும் தைத்து உருவுமிடமிாகிய போர்க்களம் முழுதும் தான் சென்று கிற் பான் ; அது கழிந்ததே! நறுமணமுள்ள தன்னுடைய கையால் எம்முட்ைய தலேயைத் தடவி அன்பு செய்வான் அது கழிக் ததே அதியமான் மார்பகத்துத் தைத்த வேல், அவன் மார்பில் மாத்திரம் தைத்ததன்று ; அது பானரது பாத்திரத்தின் துளை யில் உருவி, இரப்போர் கையினுள்ளும் தைத்துருவித் தன்ற்ை. புரக்கப்படும் சுற்றத்தாரது கண்ணின் கருமணி ஒளி மழுங்க, புலவரது காவின் கண்னேயும் போய் விழுந்தது. எமக்கு ஆதா ரமாகிய எம்மிறைவன் எவ்விடத்துள்ளான்கொல்லோ ! இனி இவ்வுலகத்தில் பாடுவாருமில்ல ; பாடுவார்க்கொன்று சவாரு மில்லே, குளிர்ந்த நீர்த்துறைக்கண்ணே பூக்கும் பகன்றைப்பூ, பிறராற் பறித்துச் சூடப்படாமல் வினே கழிந்தாற்போல, பிறர்க்கு ஒரு பொருளைக் கொடாது மாய்ந்துபோகும் உயிர்கள் மிகப்பல. அத்தன்மையனே எம்மரசன் அவனேயின் றிக் கழி