கவிதைகள்
I. ‘நல்லிசைப் புலவர்கள்’ எனும் நூலினைப் பாண்டித்துரைத் தேவருக்கு உரிமையாக்கிப் பாடிய பாடல்.
'பாடல் சான்ற மாட மதுரையில்
நான்காம் சங்கம் நலனுற காட்டி
அமிழ்தினுமினிய தமிழ்மொழி அறிவைப்
பெறுமாறு செய்த பெருமான் உலகில்
ஈண்டிய புகழ் சேர் பாண்டித்துரையவன்
அரியவள்ளன்மைக் குரிமையாகுக
பல்லிசை நிறீஇய பாவலர் புகழ்சேர்
நல்லிசைப் புலவர்களாம் இந்நூலே!’
II. நவராத்திரி விழாவின் போது சேதுபதி மன்னர் முன்னிலையில் ஒன்பது நாட்கள் பாடிய 18 பாடல்களுள் சில:
1
பூந்தண் மலர்க்காப் புடையுடுத்துப் பொலியு முகவா பரிபுரக்கும்
புகழ்சேர் சேது குலவேந்தன் பனித குணத்தா னருண்மனத்தான்
காந்தண் மலர்நேர் கரமாதர் காமுற் நடையுங் கர்மனருங்
கவிஞர் தமக்குக் கனகநிதி களிப் போடளிக்கு மெழிலியனான்
பரந்தண் முடிசேர் புவியரசர் பராவும் ராஜ ராஜவள்ளல்
பலவும் படைத்துப் படிபுரந்து பன்னா போங்க வருளுதியால்
தேந்தண் மலர்நேர் பதயுகளச் செல்வி யரனார் மனமகிழுந்
தேவி தேவை யரையரரண் மனைசேர்ந் திலங்குந் திரிபுரையே
2.
பஞ்சலட் சணவிலக் கியபார் காவியம் பலவும் படித்துணர்ந்தோன்
பாரதிண் யுயவேளி ராஜரா ஜேஸ்வரன் பலவுலகு தொழுசேதுமன்
பகருந் தயாளகுண சுமுகனர னடிதொழும் பத்தியா னுயர்புத்தியான
கிஞ்சுக நிகாத்தசொன் மடவார்கள் மயலுடன் கிழியெழுது கின்ற வெழிலான்
கீத வாத் தியவிநோ தன்கோடி காவலன் கேடில்நற் றமிழ்நாவலன்
கிளருமரி யாதனத் தான்கந்த மாதனத் தான்கவிக் கேதனத்தான்
மஞ்சுசெறி சோலைசூழ் தேவைநக ராதிபதி மகிதல மளிக்கும்வள்ளல்
மாகம் பராவுதரு புகழினான் தளவதன் மாலையணி புயபூதரன்
மருவுமிர ணியகெர்ப்ப யாஜிரவி குலமுத்து விஜயரகு நாதமரபோன்
எஞ்சுத லிலாதநற் கல்விவய திருநிதியொ டிறைமையும் முறைமை யுறவே
ஏற்றமுறு பர்வத குமாரியைக் குமரனைமு னீன்றதற் பரையைஞான
மிலகுமடி யார்க்கிதந் தருமருந் தைப்பணிந் திதயமுற வாழ்த்துவோமே