பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 காற்றில் வந்த கவிதை அவிழ்ந்தவேட்டி கட்டாமல் திறந்தவாயை மூடாமல் நிழலைக்கண்டால் நிற்காமல் தண்ணிர்கண்டால் குடியாமல் மனுசர்கண்டால் பேசாமல் மாட்டைக்கண்டால் விலகாமல் என்புருசன் வல்லரக்கன் எதிரேவரக் கண்டீரோ கணவனைப்பற்றி விசாரித்துக்கொண்டே வருகிருள். யாரும் அவனைப் பார்த்ததாகக் கூறவில்லை. அதனால் அவள் வேகமாக வீட்டுக்கு வருகிருள். வந்ததும் அரிவாள் மனையை எடுத்து வைத்து மீனையெல்லாம் கண்டங் கண்டமாக அரிந்து போடுகிருள். பிறகு அடுப்பிலே வைத்து அந்தக் கண்டங் களைப் பக்குவம் செய்கிருள். வேகமாக வந்தாளாம் வீட்டுக்குவந்து சேர்ந்தாளாம் அரிவாள்மனையை எடுத்தாளாம் அரிந்தரிந்து போட்டாளாம் அரிந்தரிந்து போட்டாளாம் ஐம்பது கண்டம் போட்டாளாம் நாணிக்கோணிப் பார்த்தாளாம் நாற்பதுகண்டம் போட்டாளாம் சாற்றையெல்லாம் கூட்டிக்கிட்டு அடுப்பிலேதான் வைத்தாளாம் தீயைநல்லா எரித்தாளாம் சினுக்குத்தாளம் போட்டாளாம்