பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 காற்றில் வங்த கவிதை திரும்புகிருர்கள். அவர்களில் ஒருத்தன் வேகமாகக் கால் எடுத்து வைக்கக் கூடியவன். அவன் முன்னல் நடக்கிருன். சும்மா நடக்கவில்லை. பாடிக்கொண்டே நடக்கிருன். பாட்டைக் கேட்க வேண்டும் என்ற ஆசையிலே பெண்களும் வேகமாகக் காலெடுத்து வைக்கிருர்கள். சலிப்புப் பறந்து போகிறது. தொலைவும் நெருங்கிவிடுகிறது. மனேரஞ்சிதம் பாலா என்ற இந்தப் பாடல் செய்கிற அற்புதம் அது. பாடுகிறவன் நடந்துதான் போகிருன். ஆனால், அவன் கோச்சிலே ஒய்யாரமாகப் போவதாகக் கற்பனை செய்துகொண்டு பாடுகிருன்! நாடு செழித்திடவே மனோரஞ்சிதம் பாலா நல்லமழை பெய்யவேனும் மனேரஞ்சிதம் பாலா தேசம் செழித்திடவே மனேரஞ்சிதம் பாலா செல்ல மழைபெய்யவேணும் மனேரஞ்சிதம் பாலா கோச்சுமேலே கோச்சுவரும் மனோரஞ்சிதம் பாலா கோலக்கோச்சு முன்னேவரும் மனுேரஞ்சிதம் பாலா நானும்வரும் கோச்சிலேதான் மஞே, ரஞ்சிதம் பாலா நாகசுரம் ஊதிவரும் மஞேரஞ்சிதம் பாலா முட்டாக்குப் போட்டவண்டி மனேரஞ்சிதம் பாலா முகப்புவச்சு காந்தவண்டி மனோரஞ்சிதம் பாலா காந்தவண்டி போறபோக்கு மனேரஞ்சிதம் பாலா கண்ணிரண்டும் சோருதடி மனோரஞ்சிதம் பாலா ஒரே பாட்டிலே வழி தீர்ந்துவிடுமா? இப்படிப் பல பாட்டுக்களைப் பாடுவார்கள். பாட்டுக்கு மத்தியிலே வேடிக்கையாகப் பேச்சும் வரும். ஊர் வம்பும் வரும். சிரிப்பொலியும். கேலியும் கலந்து வரும். கதை சொல்லிக் கொண்டே நடப்பதும் உண்டு,