பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மலைமேலே மஞ்சு

அஞ்சாங்கல் என்ற ஒரு விளையாட்டு உங்களுக்குத் தெரியுமா? ஐந்து சிறு கற்களை வைத்துக்கொண்டு பெண்கள் விளையாடும் விளையாட்டு அது.

ஒரு கல்லை மேலே வீசிவிட்டு மற்ற நான்கு கற்களையும் தரையிலே போடுவார்கள். மேலே வீசிய கல்லைக் கீழே விழாமற் பிடிக்க வேண்டும். பிறகு அந்தக் கல்லே மறுபடியும் மேலே வீசிவிட்டுக் கீழுள்ள கற்களை ஒவ்வொன்ருக எடுத்துக் கொண்டே வீசிய கல்லையும் பிடிக்க வேண்டும்.

பிறகு இரண்டிரண்டாக, மூன்றும் ஒன்றுமாக, நான்கும் சேர்த்து இவ்வாறு பலவகைகளில் கற்களை எடுத்து அஞ்சாங்கல் ஆட்டம் தொடரும். வீசிய கல்லைப் பிடிப் பதிலோ, கீழே உள்ளவற்றை வரிசைப்படி எடுப்பதிலோ தவறு நேர்ந்தால் ஆட்டம் போய்விடும். பிறகு வேறொருத்தி ஆடுவாள்.

இப்படி ஆடும்போது நிலத்தைக் கையால் தட்டுவதும் நெஞ்சைத் தட்டுவதுமாகப் பலவித ஒசைகள் எழுப்பு