பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115



பொங்கலோ பொங்கல்


பொங்கல் என்ருல் முக்கியமாக விவசாயிகளுக்கு ஒரே கொண்டாட்டம். பண்ணையிலே அநேகமாக வேலையெல்லாம் முடிந்துவிடுகிறது. அரும் பாடுபட்டு உழுது விளைத்த தானி யங்களெல்லாம் வீடு வந்து சேர்ந்தன. இனி அத்தனை வேலை இல்லை. மாடுகளுக்கும் ஒய்வு கிடைக்கிறது. உழவனும் கொஞ்சம் இளைப்பாறலாம். தை பிறக்கப் போகிறது. இனிக் கொண்டாட்டம்தானே?

பொங்கலுக்கு வேண்டிய முன்னேற்பாடுகளெல்லாம் ஒரு மாதமாகவே நடைபெற்று வருகின்றன. எந்தப் பட்டி யைப் பார்த்தாலும் புதுமை பொங்குகிறது. எட்டு மைல் பத்து மைல் சென்று உழவர்கள் மூங்கில் வெட்டி வரு கிருர்கள். புதிய பட்டிப் படல்கள் முடைவதும், பழைய படல்களைச் செப்பம் செய்வதும் ஒவ்வொரு பண்ணையிலும் ஒரு மாதமாகக் காணும் காட்சியாகும். மாடு மேய்க்கும் பையன்கள் புல்லாங்குழல் ஊதித் தங்கள் இசைக்கலையின் ஒத்திகை நடத்துகிருர்கள். பட்டிப் பொங்கலன்று யார் யார் பட்டினி இருந்து விரதம் காத்துப் பட்டி ஆவுடை