பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொங்கலோ பொங்கல் 117 அன்று இரவு எத்தனையோ விளையாட்டுக்கள்: ஒயில் கும்மி இல்லாத பொங்கல் பொங்கலே அல்ல . அந்த ஒயில் கும்மிப் பாட்டிலேதான் எத்தனை சுவை! வள்ளி பரண்மீதிருந்து தினைப்புனம் காவல் செய்கிறபோது கிளி கடியும் பாட்டொன்று பாடுகிருள். அந்தப் பாட்டு ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டுப் போகும்படி கூறும் சிலேடைப் பாட்டாக அமைந்திருக்கிறது. பாரத நாடு சுதந்திரமடையாத அந்தக் காலத்தில் பாடியது அப்பாட்டு. இந்து சகோதரரே இங்கிலாந்துப் பட்சிகளே தந்திரங்கள் செல்லாது போ ஆலோலங்கிளிசோ-உங்கள் மந்திரங்கள் செல்லாது போ ஆலோலங்கிளிசோ வெள்ளை வெள்ளைக் கொக்குகளா மிரண்டோடும் பட்சிகளா தந்திரங்கள் செல்லாது போ ஆலோலங்கிளிசோ-உங்கள் சொந்தவீடு ஏ.கிடுவீர்ஆலோலங்கிளிசோ காடைகவு தாரிகளா கரிக்குரிவிப் பேடுகளா தந்திரங்கள் செல்லாது போ ஆலோலங்கிளிசோ-உங்கள் சொந்த நாடு ஏ.கிடுவீர் ஆலோலங்கிளிசோ