பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 காற்றில் வங்த கவிதை இப்படிப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டே ஒயிலாக ஆடு «чтrt{56jr. ராட்டைப் பாட்டு என்று ஒரு நாட்டுப் பாடல் இருக் கிறது. அதன் ஹாஸ்யச் சுவையே அலாதியானது. அதைக் கேட்டுச் சிரிக்காதவர்கள் கிடையாது. அந்தப் பாடலுக்கும் ஒயில் ஆட்டம் நடக்கும். மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் சிறுமிகளுக்குத் தனிப்பட்ட கொண்டாட்டம். அன்று அவர்கள் மார்கழி மாதமெல்லாம் பிடித்து வைத்த பிள்ளையாரைக் கொண்டு போய் ஆற்றிலே விடுவார்கள். ஊரெல்லாம் அவர்களுடைய கும்மியும் கோலாகலமுமாக இருக்கும். அன்று சாதாரணமாக ஆடவர்களெல்லோரும் மாலை கோயிலுக்குச் செல்வது வழக்கம். மாலே கோயிலுக்கு மூங்கிற் குழாயிலே பால் எடுத்துச் சென்று இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். மாலை கோயிலிலேயும் ஒரு பெரிய திருவிழாத்தான். அங்கேயும் ஒயில் கும்மியாட்டம் பார்க்கலாம். மாட்டுப் பொங்கலன்று பிறந்த காளைக் கன்றுகளே உழவர்கள் கடவுளுக்கென்று யதேச்சையாக விட்டுவிடுவார்கள். அதற்கு ஒரு வேலையும் இல்லை. நன்முகத் தின்று கொழுத்திருக்கும். அதற்குச் சலகைக் காளே என்று பெயர். அதைக் கொண்டுவந்து மாலை கோயிலிலே ஆட்டம் பழக்குவார்கள். பறை மேளத்திற்குத் தக்கவாறு அது காலெடுத்து வைக்க வேண்டும். பார்க்கிறதற்கே பயத்தை உண்டாக்கும் அக்காளை வாத்தியங்களின் ஒசையாலும், ஜனத் திரளின் புதுமையாலும் மிரண்டு மிரண்டு துள்ளிக் குதிக்கும். இப்படியாகப் பொங்கல் என்ருல் ஒரே குதுரகலம். பட்டணங்களிலே வசிக்கும் மக்களுக்கு இந்தக் குதுரகலம் புரியாது. கிராமத்திற்குச் சென்று அந்த மக்களோடுக.