இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
124
காற்றில் வந்த கவிதை
குழந்தையிடத்திலே தாய்க்கு எத்தனை அன்பிருக்கிறது! அந்தத் தாயின் அன்பை அளவிட முடியுமா? 'பெற்ற மனம் பித்து: பிள்ளை மனம் கல்லு' என்பார்கள். ஆனல் எல்லாப் பிள்ளைகளும் கல்மனம் படைத்தவர்களாக இருப்ப தில்லை. தாயின் அன்பை அறிந்து அதிலே கட்டுண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் பலபேர் உண்டு
எல்லாவற்றையும் துறந்த ஞானிகள்கூட தாயின் அன்பால் கவரப்பட்டிருக்கிருர்கள். பட்டினத்தடிகளின் துறவு ஆச்சரியமானது. அவரும் தாயின் அன்பிலே வசப்பட்டு நின்றதை நாம் அறிந்திருக்கிறோம்.
அந்தத் தாய் தன் குழந்தையைப்பற்றி ஆயிரம் ஆயிரம் கனவுகள் காண்கிறாள். அதன் இன்பத்திலும், சுகத்திலும், நன்மையிலும் தாய்க்கு அளவு கடந்த ஆர்வம்.
ஒரு தாய் தன் குழந்தையைத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டுகிருள். தாலாட்டுப் பாட்டும் பாடுகிறாள். அவளுடைய பாட்டிலே அவளுடைய ஆசைகளெல்லாம் வெளி