பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தந்தனத்தான்


வே லை ஒன்றும் செய்யாமல் குறும்பு மட்டும் செய்து கொண்டு திரிகிறவர்கள் சில பேர் உண்டு. அவர்களுக்கு மரியாதை இராது. ‘உதவாக்கறைகள்’ என்ற பட்டம் வேண்டுமானால் கிடைக்கும்.


சும்மா திரிகிறவனுடைய வாய் சும்மா இராது. ஏதாவது ஒரு தெம்மாங்குப் பாட்டை முணுமுணுக்கும். அவனைப் பற்றித் தந்தனப் பாட்டுக்காரன் என்று கூறுவார்கள். அவனுக்கே தந்தனத்தான் என்ற பேரும் ஏற்பட்டுவிடும்.


'அவனா? அவன் ஒரு தந்தனத்தான்" என்று கூறுவார்கள். அவன் வாழ்க்கையை வீணாக்குகிறவன் என்பது கருத்து.


இந்தத் தந்தனத்தானுடைய ஆடம்பரத்துக்கு மட்டும் ஒரு குறையும் இராது. அவனைப்பற்றி ஒரு நாடோடிப் பாடல் உண்டு: