128
காற்றில் வந்த கவிதை
எல்லாரும் கட்டும் வேட்டி
ஏளேக்கேத்த சாயவேட்டி
தந்தனத்தான் கட்டும் வேட்டி
சரியான சரிகை வேட்டி
எல்லோரும் போடும் சட்டை
ஏளைக்கேத்த நாட்டுச் சட்டை
தந்தனத்தான் போடும் சட்டை
சரியான பட்டுச் சட்டை
எல்லோரும் கட்டும் பொண்ணு
ஏளைக்கேத்த கருத்த பொண்ணு
தந்தனத்தான் கட்டும் பொண்ணு
சரியான செவத்த பொண்ணு
நாகரிகமாய் எல்லா நலன்களுடனும் வாழவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. ஆனல் ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதற்கேற்ற முயற்சியும் வேண்டும். முயற்சி இல்லாத ஆசை வாழ்க்கையில் ஏமாற்றத்தையே அளிக்கும். சமூகத்திற்கு விரோதமான செயல்களிலே உள்ளத்தைத் தூண்டும்.
முயற்சியும் உழைப்பும் இல்லாமலேயே செல்வமும் சுகமும் கிடைக்க வேண்டும் என்கிற ஆசை பலருக்குண்டு. அதனால் அவனுக்கும் துன்பம்; சமூகத்திற்கும் தீங்கு விளைகிறது.
'தேவைகளைக் குறைத்துக்கொள்: பிறருக்காக வாழ்' என்று ஆன்ருேர்கள் உபதேசம் செய்திருக்கிரு.ர்கள். இந்த உபதேசத்தைப் பின்பற்றுகிறபோது சமூகம் இன்பத்தில் ஒங்குகிறது. தனி மனிதனும் தன் வாழ்க்கையில் சாந்தி யடைகிருன்.