பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

காற்றில் வந்த கவிதை

கணக்கு மாமனர்




வேலை ஒன்றும் செய்யாமல் பிறருடைய உழைப்பைக் கொண்டே சுகமாக வாழும் பண்ணைக்காரர்களும் உண்டு. அவர்களைக் கொடுத்து வைத்தவர்கள்' என்று கிராமத்திலே சொல்லுவார்கள். "உட்கார்ந்த இடத்திலேயே அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. அவர்கள் எதற்கு வேலை செய்யவேண்டும்?' என்றும் பேசுவார்கள்.

இப்படிச் சுகமாக இருக்கின்ற பேர்வழிகளில் சிலர் பெரிய உலுத்தர்களாக இருப்பார்கள். தங்கள் குடும்பத்திற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொள்ளுவதிலும் அவர்களுக்கு விருப்பம் இராது.

மாமனர் உலோபியாக இருந்துவிட்டால் அவர் கையை எதிர்பார்த்து வாழும் மருமகள் பாடு திண்டாட்டந்தான். பிரிவினை இல்லாத குடும்பத்திலே மருமகள் இவ்வாறு அல்லல் படுவதுண்டு.

மகன் தந்தையின் பேச்சை மீறி நடக்கமாட்டான். சர்வாதிகாரமும் தந்தையிடத்திலே இருக்கும். பெட்டிச்