பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கணக்கு மாமனார்

131



சாவியும் அவரிடத்திலேதான். அவர் கணக்குப் பார்த்துக் கொடுக்கிறவர்.

மாமியாருடைய கொடுமைக்கு ஆளாகி நடக்கும் மருமகளுக்கு இப்படிக் கணக்குப் பார்க்கிற மாமனரும் வாய்த்து விட்டால் அவள் வாழ்க்கை பெருந் துன்பமாக முடியும். நாடோடிப் பாடல் ஒன்று இதை நன்றாக விவரிக்கிறது.

மேற்கே மழை பேய மேல் கிணறு தண்ணிர் வர
கொக்கு வடம்பிடிக்கக் கோழிக்குஞ்சு தண்ணிர் கட்ட
சுள்ளெறும்பு பாத்திகட்டச் சோலைக்குயில் நாற்றுநட
காக்காய் கருதுவெட்டக் கட்டெறும்பு தாம்படிக்க
மச்சான் படியளக்க மாமனார் கணக்குப் பார்க்க
மூளிப்பையன் வாசலிலே முள்ளு முள்ளாய்க் குத்துதே