பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சீதனம் 133 அண்ணனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. சீர்க்கடாரி இன்னும் வரவில்லை என்பதை அவன் இப்படிக் கிண்டலாகச் சுட்டிக் காண்பிக்கிருன் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் தெரியாமலா போகும்? அண்ணன் இந்தக் கிண்டல் வார்த்தைக்குத் தன் பங்கையும் செலுத்த நினைத்தான். அவனுக்குத் தன் மாமனர் வீட்டிலிருந்து சீதனமாகப் பஞ்சு மெத்தை வர வில்லையாம். அதைத் தன் மனைவிக்குச் சுட்டிக்காட்ட எண்ணி, 'தம்பி, கால் வலியோடு கீழே உட்காராதே. உன் அண்ணி சீதனமாகக் கொண்டு வந்திருக்கும் பஞ்சு மெத்தை யிலே படுத்துக்கொள்' என்ருன் அவன். பெண்கள் இரண்டு பேரும் உள்ளம் வெதும்பினர்கள். அப்படி அவர்கள் துன்பப்பட வேண்டும் என்பதற்காகவே அண்ணனும் தம்பியும் பேசினர்கள். சீர்வரிசைகள் சரியானபடி உரிய காலத்தில் கொடுக்கா விட்டால் எத்தனையோ விபரீதங்கள் ஏற்படுவதுண்டு. கையில் பொருளிருப்பவர்களுக்கு இந்தத் துன்பம் இல்லை. தாராளமாக அவர்கள் சீதனம் கொடுக்க முடியும். அப்படிக் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ள ஒருவனைப்பற்றி ஒரு நாடோடிப் பாடல் வருணிக்கிறது. அவன் தந்த சீதனத் தைப் பாட்டிலேயே பாருங்கள்: என்னென்ன வித்துவகை கொண்டுவந்தான்.பள்ளனவன் முத்துச்சம்பா, மிளகுசம்பா, அன்னச்சம்பா, அழகுசம்பா ஆயிரம் தானியங்கள் கொண்டுவந்தான் பள்ளனவன் வெள்ளைக்குதிரை யுடன் விருதுகொண்டு வந்தானவன் வெண்சாமர்ை யதுவும் கொண்டுவந்தான் பள்ளனவன் செவ்விளநீர் தான் குடிக்க தென்னந்தோப்பு சீதனம்