பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135ஆமடி தங்கம்

காட்டிலே தினை விதைத்துப் பயிர் செய்வதென்ருல் எளிதிலே முடிகிறதா? மலைக்காடுகள் பண்படாத நிலையில் இருக்கும். கள்ளியும் கற்முழையும் வளர்ந்து புதராகக் கிடக்கும். அவற்றையெல்லாம் வெட்ட வேண்டும். முள்பெருக்கி நிலத்தைத் துப்புரவு செய்ய வேண்டும்.

இப்படியெல்லாம் செய்து விதைத்தாலும் கதிர் முற்றத் தொடங்குகிற காலத்திலே வெகு எச்சரிக்கையாகக் காவல் புரியவேண்டும். கிளி ஓட்ட வேண்டும். இல்லாவிட்டால் அத்தனை சிரமமும் விளுகிவிடும். தின விளைந்தாலும் வீடு வந்து சேரவேண்டுமல்லவா?

தினை விளைவிப்பதில் உள்ள சிரமத்தைக் கூறுவதிலிருந்தே உழவுத் தொழிலில் உள்ள சிரமத்தையெல்லாம் அறிந்து கொள்ளலாம். 'என்றும் உழவே இனிது' என்பது உண்மையான வாசகந்தான். உழவுத் தொழில் இனிது என்ருலும் எளிது அன்று. தினை விதைப்பைப் பற்றிய பாடலை இப் பொழுது பார்ப்போம்: