இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
136
காற்றில் வந்த கவிதை
கள்ளி வெட்டி-ஏலேலோ
முள் பெருக்கி-ஆமடி தங்கம்
முள் பெருக்கி-சொல்லடி மயிலே
கள்ளி வெட்டும்-ஏலேலோ
குழிதனிலே-ஆமடி தங்கம்
குழிதனிலே-சொல்லடி மயிலே
மான் வந்து ஏலேலோ
ஈனிடவே-ஆமடி தங்கம்
ஈனிடவிே-சொல்லடி-மயிலே
மானை நல்ல-ஏலேலோ
வலத்தில் கட்டி-ஆமடி தங்கம்
வலத்தில் கட்டி-சொல்லடி மயிலே
மனித ரிஷபம்-ஏலேலோ
இடத்தில் கட்டி-ஆமடி தங்கம்
இடத்தில் கட்டி-சொல்லடி மயிலே
என்ன தினை-ஏலேலோ
விதைப்ப மென்று-ஆமடி தங்கம்
விதைப்ப மென்று-சொல்லடி மயிலே
கருந்தினையும்-ஏலேலோ
செந்தினையும்-ஆமடி தங்கம்
செந்தினையும்-சொல்லடி மயிலே