இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
138
காற்றில் வந்த கவிதை
அசலாளை-ஏலேலோ
காவல் வைத்தால்-ஆமடி தங்கம்
காவல் வைத்தால்-சொல்லடி மயிலே
அடிமடியில்-ஏலேலோ
கதிர் ஒளிப்பாள்-ஆமடி தங்கம்
கதிர் ஒளிப்பாள்-சொல்லடி மயிலே
உள்ளாளை-ஏலேலோ
காவல் வைத்தால்-ஆமடி தங்கம்
காவல் வைத்தால்-சொல்லடி மயிலே
உள் மடியில்-ஏலேலோ
கதிர் ஒளிப்பாள்-ஆமடி தங்கம்
கதிர் ஒளிப்பாள்-சொல்லடி மயிலே
தங்கைதனை-ஏலேலோ
காவல் வைப்போம்-ஆமடி தங்கம்
காவல் வைப்போம்-சொல்லடி மயிலே