பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ முகம்

143


அவனுக்கு முன்னால் நின்று ஆறுதல் பெறலாம். மன அமைதி பெறுவதற்கு அவனுடைய முக தரிசனத்தைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை.


தெய்வ முகம் காணவேண்டும் என்று மக்கள் ஆசைப் படுவதை நாடோடிப் பாடலிலும் நாம் அறியலாம்.

கிராம தேவதைகளிலே மாரியம்மனுக்குத் தனிப்பட்ட திருவிழாக்கள் உண்டு. முத்துப் பல்லக்கிலே மாரியம்மன் பவனி வருவதைப் பார்த்து மக்கள் களிப்பெய்துவார்கள்.

மூன்று மலையிலே கல்லுருட்டி
முத்துக் குடத்திலே பால் காய்ச்சி
காய்ச்சின பாலும் கசக்கு தென்பாள்
கைவிட்ட தேனும் புளிக்கு தென்பாள்

நாலு மலையிலே கல்லுருட்டி
நாக சரத்திலே பால் காய்ச்சி
காய்ச்சின பாலும் கசக்கு தென்பாள்
கைவிட்ட தேனும் புளிக்கு தென்பாள்

தங்க முக்காலிபோட் டல்லவோ
தைலம் தேச்சுத் தலை முழுகி
தங்கத்து நம்மூர் மாரி யாத்தாள்
தங்கப் பல்லாக்குமேல் ஏறிவராள்

பொன்னு முக்காலி போட் டல்லவோ
புனுகு தேச்சுத் தலை முழுகி
பொன்னான நம்மூர் மாரி யாத்தாள்
பொன்னுப் பல்லாக்குமேல் ஏறிவராள்