பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I46 காற்றில் வங்த கவிதை அவன் தன் காதலிக்கு வழங்க நினைக்கிருன். அந்த நினைப்பிலே அவனுக்கு அளவில்லாத இன்பம் பிறக்கிறது. இதைவிட உயர்ந்த இன்பம் ஒன்று இருக்கிறது. இறை வனுக்கு அளித்துப் பெறுகின்ற இன்பம் அது. எல்லாம் தருகின்றவன், எல்லாம் நிறைந்தவன் இறைவன். அவனுக்கு நாம் கொடுக்கக் கூடியதொன்று மில்லை. ஆனால், நமக்குப் பிரியமானதை அவனுக்கு அர்ப்பண மாகக் கொடுப்பதிலே ஒரு தனிப்பட்ட இன்பம் இருக்கிறது. அவன் கொடுத்ததைத் திருப்பி அவனுக்குக் கொடுப்பதே யானுலும் அதில் எல்லையற்ற இன்பம் பொங்குகிறது. ஒரு பெரியவர் எண்ணிப் பார்த்தார். கடவுளுக்குக் கொடுக்கக்கூடியது தன்னிடத்திலே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தார். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அது கடவுள் கொடுத்ததாக அவருக்குத் தோன்றியது. தாமாகவே உண்டாக்கிக்கொண்ட பொருளாகப் பார்த்துக் கடவுளுக்குக் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. மேலும் மேலும் ஆராய்ச்சியிலே இறங்கினர். தமது உடைமைகளை யெல்லாம் ஒவ்வொன்ருக எண்ணிப் பார்த்தார். கடைசியிலே அவருக்கு வெற்றி கிடைத்தது. கடவுள் கொடுக்காமல் அவரே சம்பாதித்துக்கொண்டவை சில அவ ரிடத்திலே இருப்பதை அவர் கண்டு பிடித்துக்கொண்டார். உடனே கடவுளின் கோயிலுக்கு ஒடினர். "அப்பனே, இதோ எனக்கே சொந்தமான பொருள்களை உனக்குக் காணிக்கையாகக் கொண்டு வருகிறேன். இவற்றை ஏற்றுக் கொள். நான் செய்த கொடுமைகள், தீமைகள், பாவங்கள் எல்லாம் எனக்கே உரியவை. நீ அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை. அவற்றை உனக்கு அர்ப்பணம் செய் கிறேன்” என்று அவர் உள்ளம் உருகிக் கூவிஞராம். இறைவனுக்குக் கொடுக்கக்கூடிய நல்ல பொருள்கள் எதுவும் அவனருளால் கிடைக்காமல் நமது தனியுரிமையாக