பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏலேலோ ஐலலோ

15

கொள்ளும். அப்படி அன்பில்லாத வார்த்தையைக் கேட்டு ஒரு கிளி பறந்தோடி விட்டதாம். அதை ஏலேலப் பாட்டுக் கூறுகிறது.

ஆலநல்ல ஏலேலோ மரத்துக்கிளி-ஐலலோ

மரத்துக்கிளி-ஐலலோ

ஆளைக் கண்டால் ஏலேலோ பேசுங்கிளி-ஐலலோ

பேசுங்கிளி-ஐலலோ

நான் வளர்க்கும் ஏலேலோ பச்சைக்கிளி-ஐலலோ

பச்சைக்கிளி-ஐலலோ

நாளைவரும் ஏலேலோ கச்சேரிக்கே-ஐலலோ

கச்சேரிக்கே-ஐலலோ

ஆசைக்குத்தான் ஏலேலோ கிளிவளர்த்து-ஐலலோ

கிளிவளர்த்து-ஐலலோ

அக்கரையில் ஏலேலோ மேயவிட்டேன்-ஐலலோ

மேயவிட்டேன்-ஐலலோ

பாவிப்பயல் ஏலேலோ சொன்ன சொல்லு-ஐலலோ

சொன்ன சொல்லு-ஐலலோ

பாவி சொல்லு ஏலேலோ பறந்திடுச்சு-ஐலலோ

பறந்திடுச்சு-ஐலலோ

[ஆல நல்ல மரத்துக்கிளி-ஆல மரத்தில் வளர்ந்த நல்ல கிளி. பறந்திடுச்சு-பறந்து விட்டது.