பிச்சை எடுக்க வருகின்றவர்களில் எத்தனையோ வகை உண்டு. கூன், குருடு, நொண்டி முதலான உடற் குறைகளைக் காட்டிப் பிச்சை எடுப்பவர்கள் ஒரு வகை. இவர்களைக் கண்டவுடனே, ஐயோ பாவம் என்று இரக்கம் ஏற்படுவது இயல்பு. அதனால் மக்கள் இவர்களுக்குத் தங்களாலான உதவியைச் செய்யப் பரிவோடு முன்வருவார்கள்.
ஆனல், உடம்பிலே குறையில்லாமல் இருக்கிறவர்களிடத்திலே அவ்வளவு பரிவு ஏற்படுவதில்லை. தள்ளாத வய தென்றாலும் அதற்காக இரக்கம் பிறக்கும். நல்ல வாலிபப் பருவத்திலே பிச்சை கேட்க வருகின்றவர்களிடம் பொதுவாக இரக்கம் ஏற்படுவதில்லை. “உமக்கென்ன, ஏதாவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா?" என்று பலர் கேட்பார்கள்.
இள வயதுக்காரர்களென்ருலும் மழைப் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தால் உழுது பயிர் செய்யும் விவசாயிகள் நிறைந்த கிராமங்களில் அவர்களுக்குத் தாராளமாகப் பிச்சை கிடைக்கும். மழைப் பாட்டுக்காரர்கள் வந்தால்