பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மழைக் கஞ்சி 23 மானத்தை நம்பியல்லோ ஐயோ வருண வேதா மக்களையும் பெத்துவிட்டோம் ஐயோ வருண தேவா மானஞ் செழிக்கவில்லை ஐயோ வருண தேவா மக்கள் வயிறு வாடறதே ஐயோ வருண தேவா மேழி பிடிக்குங் கை முகஞ்சோர்ந்து நிற்கிறதே கலப்பை பிடிக்குங் கை கைசோர்ந்து நிற்கிறதே வேலித் தழை பறித்து விரலெல்லாம் கொப்புளமே காட்டுத் தழை பறித்து கையெல்லாம் கொப்புளமே கலியான வாசலிலே ஐயோ வருண தேவா கையலம்பத் தண்ணியில்லை ஐயோ வருண தேவா பிள்ளை பெத்த வாசலிலே ஐயோ வருண தேவா பிள்ளையலம்பத் தண்ணியில்லை ஐயோ வருண தேவா இப்படி அவர்கள் பாடிக்கொண்டு புறப்படும் தருணத் தில் அவ்வூரிலுள்ள பெரிய தனவந்தர்கள் அவர்களைத்