பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.கொடும்பாவி

செங்கோல் வழுவாமல் நாட்டிலே ஆட்சி நடந்தால் மாதம் மும்மாரி பெய்யும் என்று கூறுவார்கள். ஆட்சி முறையிலே தர்மம் குன்றிவிட்டால் வானம் பொய்த்துவிடுமாம். அதேபோல மக்கள் நீதி தவறி நடந்தாலும் மழை சரியாகப் பெய்யாதாம்.

நாட்டுப்புறத்திலே யாராவது ஒருவர் புதிதாக ஓர் ஊருக்கு வந்தால் அவரிடத்திலே முதலில் மழையைப்பற்றித் தான் விசாரிப்பார்கள், "என்னப்பா, உங்கள் ஊரிலே மழைதுளி உண்டா?" என்று கேட்பார்கள்.

"மழையே கிடையாது. இந்த வருஷம் இன்னும் ஒரு சொட்டுத் துளிகூட விழவில்லை. எங்கள் ஊருக்கு மழையே வராது. ஊரிலே எல்லோரும் நீதியாக நடந்தால்தானே மழை வரும்?" என்று பதில் சொல்வதுண்டு.

நியாயம் தவறி நடந்தால் மழை பெய்யாது என்பதில் மக்களுக்கு அத்தனை நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் மழை இல்லாத காலத்திலே, "கொடும்பாவி சாகவேனும்: