பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொன் கலப்பை

சோனை மழை பெய்துவிடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளம். எங்கு பார்த்தாலும் செழிப்பின் அறிகுறி.

மரங்கள் தழைக்கின்றன. பசும்புல் தோன்றுகிறது. கழனிகள் புதிய இளமையும் அழகும் கொள்ளுகின்றன.

உழவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. மழை பெய்யாத காலத்தில் ஏற்பட்ட சோர்வெல்லாம் பறந்துவிடுகிறது. அவர்கள் உள்ளம் பூரிக்கிறது. உழுது பயிரிட்டு உலகத்தைக் காக்க அவர்கள் உற்சாகத்தோடு எழுகின்ருர்கள்.

அவர்களுடைய உற்சாகத்திலே என்னவெல்லாமோ பேசுகிருர்கள். பயிர் செய்வதற்கு முதலில் நிலத்தை உழ வேண்டுமல்லவா? மழை பெய்துவிட்டதால் உழவுக்குப் பக்குவமான நிலையிலே நிலம் இருக்கின்றது.

"பொன்ஞல் செய்த கலப்பைகளை எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்று உழவன் தனது உற்சாகத்தில் கூவுகிருன்