பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

காற்றில் வந்த கவிதை


பொன்னலே கலப்பைகளே எடுத்துவா தேவேந்திரா
பொன்னலே கருவத்தடி எடுத்துவா தேவேந்திரா
பொன்னலே நுகத்தடியும் எடுத்துவா தேவேந்திரா
பொன்ஞலே பிரிக்கயிறு எடுத்துவா தேவேந்திரா
பொன்னலே கூடைகளும் எடுத்துவா தேவேந்திரா
பொன்னை மாடுகளை ஒட்டிவா தேவேந்திரா
அன்னச்சம்பா அழகுசம்பா எடுத்துவா தேவேந்திரா
சின்னச்சம்பா சீரகச்சம்பா எடுத்துவா தேவேந்திரா
முத்துச்சம்பா மிளகுசம்பா எடுத்துவா தேவேந்திரா
ஆனைகட்டிச் சேறுகலக்கி அன்னச்சம்பா நாத்துமிட்டு குதிரைகட்டிச் சேறுகலக்கிக் கொத்துச் சம்பா
                                                நாத்துமிட்டு
வெள்ளிங்கிரிச் சோங்கிலே விதவிதமா நெல்விளைப்போம்

[குறிப்பு: வெள்ளிங்கிரி என்பது கோயம்புத்துாருக்குச் சற்று தொலைவில் உள்ள மலை சோங்கு-சோலை.]

இவ்வாறு உற்சாகமாகப் பயிர் செய்து நெல் விளைந்துவிடுகிறது.

களத்தில் நெல் குவியல் குவியலாகக் கிடக்கிறது. உழவன் உள்ளம் பூரித்துப் போகிறது.

உழவன் கருணை நிறைந்தவன். அவன் தன் உழைப் பால் உயிர்களுக்குப் பசிப்பிணியைப் போக்குகிறவனல்லவா? அதனால் நல்ல விளைச்சல் கிடைத்தவுடனே அறம் செய்ய நினைக்கிருன். தங்க வள்ளத்திலே நெல்லெடுத்துத் தாசர்களுக்கு வழங்கும்படி அவன் கூறுகிருன். கோயிற் பூசாரிகள், உடற் குறையுள்ளவர்கள் ஆகிய எல்லோருக்கும் தாராள