உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொன் கலப்பை

31

மாகக் கொடுக்கிருன். மீதியுள்ள நெல்லைத்தான் அவன் சேமித்து வைக்கிறானாம்.

நெல் விளைந்த மகிழ்ச்சியிலே பள்ளிகள் ஆரவாரித்து மங்கல ஒலி செய்வார்கள். அப்படிச் செய்வதற்குக் குலவையிடுதல் என்று பெயர். தருமம் செய்த பின்னர் மீதியுள்ள நெல்லை மச்சிலும் குச்சிலும் போட்டுவிட்டுக் குலவையிடும் படி பள்ளிகளை உழவன் பணிக்கிருன்.

தங்க வள்ளம் கையிலெடுத்துத் தாசருக்குப் பிச்சையிடு
பொன்னு வள்ளம் கையிலெடுத்துப் பூசாரிக்குப்
                                                பிச்சையிடு
முச்சியிலே நெல்லெடுத்து முடவனுக்குப் பிச்சையிடு
மச்சிலேயும் குச்சிலேயும் மிச்சநெல்லைக் கொட்டிவை
போடுங்கடி பெண்டுகளே பொன்னலே ஒரு குலவை
எடுங்களடி பெண்டுகளே எல்லாரும் ஒரு குலவை
தேவேந்திரப் பெண்டுகளே சேர்ந்து குலவை
                                                      யெடுங்களே
சேர்ந்து குலவை யெடுங்களே தேவேந்திரப்
                                                      பெண்டுகளே

[முச்சி.சிறிய முறம். தேவேந்திரப் பள்ளிகளைக் குலவை யிடும்படி உழவன் கூறுகிருன்.]