பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கேலிப் பாட்டு 38 கிளிபோலத் தின்பாளும். கூட்டில் அடைத்து வைத்துள்ள கிளி ஒரு வேலையும் செய்யாமல் சாப்பிடுகிறதல்லவா? கிளியாவது சொன்ன சொல்லைத் திருப்பிச் சொல்லுகிறது. இவன் யார் சொல்லையும் கேட்க மாட்டான். இவனைப் பற்றிய பாட்டைப் பார்க்கலாம். வெள்ளாடு மேய்க்க மாட்டான் வெய்யிலிலே அலைய மாட்டான் சோளச் சோறு தின்ன மாட்டான் சொன்ன சொல்லைக் கேட்க மாட்டான் களிக்கிண்டிப் போட்ட வுடன் கிளி போலத் தின்பான் ஐயா! இது வேலை செய்யாத சோம்பேறியாகத் திரியும் ஆண் மகனைக் கேலி செய்யும் பாட்டு. பெண்களைக் கேலி செய்கின்ற பாட்டும் உண்டு. பெண்கள் தங்களுடைய அழகிலே பெருமையடைவார் கள். அவர்களைக் கேலி செய்வதாளுல் அவர்களுடைய அழகைப்பற்றி ஏதாவது சொன்னல் போதும், அதைவிட வேறு கேலி வேண்டாம். சின்னப்பன் என்கிற ஒருவன் ஒரு தூரி கட்டிளுைம். காட்டிலே நடந்த செய்தி இது. இரண்டு மரக்கிளைகளின் உதவியைக் கொண்டு அவன் தூரி அமைக்கிருன். ஊணுன் கொடி என்று ஒரு வகைக் கொடி உண்டு. அது நீளமாகப் படர்ந்திருக்கும். அது உறுதி வாய்ந்தது. எளிதில் அறுந்து போகாதது. அக்கொடியைக் கொண்டு காட்டிலே துரி கட்டி ஆடுவார்கள். சின்னப்பன் அப்படி ஒரு தூரி கட்டுகிருன். அவன் எப்படிப் பட்டவன்? கோணலான காலை உடையவன். அவன் போட்ட தூரியிலே ஒரு மங்கை 3