பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$4 காற்றில் வந்த கவிதை ஆடுகிருள். அவள் எப்படி இருக்கிருள்? பாட்டிலேயே அவளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அந்த மரத்துக்கும் இந்த மரத்துக்கும் விட்டம் போட்டு அழகான மாமரத்திலே தூரி போட்டு கோணைக் காலுச் சின்னப்பன் போட்ட தூரி குரங்கு மூஞ்சி நஞ்சக்காள் ஆடுந் தூரி ! கடவுளிடத்திலே பக்தி வேண்டும். அந்தப் பக்தியினலே மனிதன் உயர்வடைகிருன். பக்தியின் பெருமை கொஞ்ச மல்ல. நம் நாட்டிலே எத்தனையோ மகான்கள் தோன்றி யிருக்கிருர்கள். பக்தியால் அடையக்கூடிய பெருமையை அவர்கள் நமக்குக் காட்டியிருக்கிருர்கள். அவர்களுடைய உபதேசங்களைப் பின்பற்றி நாம் இறைவனிடத்திலே பக்தி செலுத்தினால் உயர்ந்த வாழ்வு பெற முடியும். பக்தி என்பது உள்ளத்திலிருந்து தோன்ற வேண்டும்: வெளி வேஷமாக மட்டும் இருக்கக்கூடாது. பார்ப்பதற்குச் சிறந்த பக்தியுடையவன் போல இருப்பதில் பயனில்லை. உண்மையான பக்தியினுல்தான் பெருமை ஏற்படும். ஒருவன் திருப்பதிக்குப் போகிருன்; தலையை மொட்டை யடித்துக் கொள்கிருன். ஆனால், அவன் மனம் தூய்மை யடையவில்லை. அதில் கெட்ட எண்ணங்கள் நிறைந்திருக் கின்றன. அவற்றைப் போக்காமல் தலையை மட்டும் மொட்டை யடித்துக் கொண்டதால் என்ன பயன்? திருப்பதியிலிருந்து அவன் வருகிருன். வழியிலே ஒரு கொல்லையைப் பார்க்கிருன். அதிலே கம்பு நன்ருக விளைந் திருக்கிறது. அவனுக்குக் கம்பங் கதிரிலே ஆசை விழுந்து விடுகிறது. இரண்டு கதிர் ஒடித்துக்கொள்கிருன். அந்தச்