பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

சமயத்திலே கொல்லைக்காரன் பார்த்துவிடுகிருன். பிறகு அவன் சும்மா இருப்பானா?

இந்தத் திருப்பதி மொட்டையைக் கேலி செய்து ஒரு பாடல் உண்டு. சிறுவர்கள் ஆடிக்கொண்டே இப்பாடலைப் பாடுவார்கள்.

திருப்பதிக்குப் போய் வந்தேன் நாராயணா
திருமொட்டை அடித்து வந்தேன் நாராயணா
அங்கே ஒரு கம்பங் கொல்லை நாராயணா
அதிலே ரண்டு கதிர் ஒடிச்சேன் நாராயணா
கொல்லைக்காரன் பார்த்து விட்டான் நாராயணா
கோலெடுத்து ஓடி வந்தான் நாராயணா !

பெண்கள் கூட்டமாகக் கூடிக் கும்மியடித்து விளையாடிக் கொண்டிருக்கிருர்கள். சாதாரணமாகக் கும்மியடிப்பதை எல்லோரும் பார்த்து மகிழ்வார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியிலே கும்.மியடிக்கிற பெண்களுக்கு உற்சாகம் இன்னும் அதிகமாகக் கிளம்பும்.

இது வழக்கமாக நடக்கிற நிகழ்ச்சி. ஆனால், அன்று அவர்கள் கும்.மியடிக்கிறபோது அத்தை மகனொருவன் அங்கு வந்து சேருகிருன். அவனைக் கேலி செய்யவேண்டுமென்று பாட்டை முதலில் தொடங்கும் பெண்ணுக்குத் தோன்றியது.

முதலில் கும்மிப் பாட்டு ஒழுங்காகத்தான் ஆரம்பிக்கிறது. அண்ணன்மாருடைய பெருமையை அது கூறுகிறது.

பெரிய கிணத்திலே பாம்படிச்சுப்
      பேரூரு வீதியில் வேட்டையாடி
வேட்டை யாடித்தானே வீட்டுக்கு வந்தார்கள்
      அண்ணன்மார் வந்தார்கள் தண்ணிர்கொடு.