பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 காற்றில் வங்த கவிதை கொள்கிறது. கூட விளையாடும் மற்றக் குழந்தைகளின் இன்பத்தையும், வசதியையும் கவனிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது முக்கியமான படிப்பினே. பட்டணங்களிலே குழந்தைகளின் விளையாட்டு ஒரு வகையாக இருக்கும். கிராமங்களிலே வேறுவகையான விளை யாட்டுக்களைப் பார்க்கலாம். பட்டணத்துக்கும் கிராமத் துக்கும் பொதுவான விளையாட்டுக்களும் உண்டு. பிஸ்ஸாம் பறத்தல் என்ற ஒரு விளையாட்டு உங்களுக்குத் தெரியுமா? இரண்டு பெண்குழந்தைகள் எதிர் எதிராக நின்று ஒருத்தியின் வலக்கையை மற்ருெருத்தி இடக்கை யாலும், இடக்கையை வலக்கையாலும் மாற்றி மாற்றிப் பிடித்துக் கொள்வ்ார்கள். கால்களை ஒன்ருகச் சேர்த்து வைத்துக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டே வேகமாகச் சுழன்று சுழன்று வருவார்கள். பிஸ்ஸாலே பிஸ், பிஸ்ஸாலே பிஸ் என்று பாட்டின் முடிவிலே பலதடவை வரும். அப் பொழுது சுழலும் வேகமும் அதிகரிக்கும். இப்படிப் பிஸ்ஸாலே பிஸ் என்று கூறுவதைக் கொண்டே அந்த விளையாட்டுக்குப் பிஸ்ஸாம் பறத்தல் என்ற பெயர் வந்திருக்க வேண்டும். இந்த விளையாட்டின்போது கிராமத்திலே பாடும் ஒரு பாட்டை இப்போது பார்க்கலாம். சுக்குச் சுக்கு வெங்கக் கல்லு பொடி நுணுக்கி சுகமான பட்டுடுத்து முகம் மினுக்கி தாயும் தகப்பனும் கையேந்தித் தாமரைக் குளத்திலே நீராட