பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாப்பிள்ளைக் குலவை

புதுமாப்பிள்ளையைப் பார்ப்பதிலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே? அவரைக் கேலி செய்வதிலே குழந்தைகளுக்கு ஒரு தனி இன்பம். ஊழியர்களுக்கு வேருெரு வகையிலே இன்பம் பிறக்கிறது. மாப்பிள்ளையிடமிருந்து நல்ல இனாம் எதிர்பார்க்கலாமல்லவா?

கிராமத்திலே பெரிய பண்ணைக்காரர் மகனுக்குத் திருமணம் நடைபெறுகின்றது. எல்லோருக்கும் ஒரே உற் சாகம். பண்ணேயிலே வேலை செய்யும் பள்ளிகளுக்கு ஒரு தனிப்பட்ட சந்தோஷம். கலியாண வீட்டிலே நல்ல விருந்து. அதற்கு மேலே மாப்பிள்ளையிடமிருந்து பணம் கிடைக்கப் போகிறது. ஆகையால் அவர்கள் சிரித்த முகத்தோடு வரிசையாக நிற்கிறார்கள்.

மாப்பிள்ளை குதிரை மேலே பவனி வருகிரு.ர். பள்ளிகள் குதிரையின் முன்னுல் நின்றுகொண்டு குலவைப் பாட்டுப் பாடுகிருர்கள். அது மாப்பிள்ளையை வாழ்த்துகின்ற பாடலுமாகும்.