பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 காற்றிலே வந்த கவிதை வெளியே நீட்டுகிறது. கைகால்களை வேகமாக ஆட்டுகிறது. தாய் குழந்தையோடு பேசுகிருள். மகிழ்ச்சி ததும்பும் அவளுடைய வதனத்தைப் பார்த்துக் குழந்தை சிரிக்கிறது. ஊங்கு என்ருல் குழந்தைக்கும் தாய்க்கும் தெரிகின்ற தனி மொழியில் பால் என்று பொருள். குழந்தை ஊங்கு என்று சொல்லுகிறது. தாய் அதையே வைத்து ஒரு பாட்டுப் பாடுகிருள். ஊங்கு குடிக்கிறயா? ஊறுகாய் தின்கிறயா? பாலுக் குடிக்கிறயா? பழஞ்சோறு தின்கிறயா? அக்கக்கா ஊர்க்குருவி ஆலாம் பழம்போடு தின்னப் பழம்போடு திருமுடிக்கோர் பூப்போடு இப்படித் தாய் நீட்டி நீட்டிப் பாடுகிருள். குழந்தை கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு உடம்பை நெளித்து நெளித்து ஆ...ஊ என்று பேசுகிறது. நாக்கை வெளியே நீட்டுகிறது. நாக்கை நாக்கை நீட்டுதாம் நல்ல பாம்புக் குட்டியாம் ஊங்கு குடிக்கிறயா? ஊறுகாய் தின்கிறயா? என்று.மேலும் பாடுகிருள் தாய்.