பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டு 5i இப்படிக் குழந்தையோடு கொஞ்சிக் கொண்டிருக்கிற தாய் பாட்டை நிறுத்துகிருள். குழந்தை உறங்க வேண்டிய நேரம் வருகிறது. தொட்டிலில் குழந்தையை அன்போடு வைத்துத் தாலாட்டுகிருள். மறுபடியும் பாட்டுத் தொடங்குகிறது. தாலாட்டும்போது பாடுகின்ற பாட்டுக்கள்தாம் எத்தனை எத்தனை: அவைகளிலே உள்ள கற்பனைகளும் எத்தனே! உறக்க மயக்கத்திலே அழத் தொடங்கிய குழந்தையும் தாலாட்டுப் பாடலைக் கேட்டு அழுகையை நிறுத்துகிறது: உள்ளம் மகிழ்கிறது. அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது. ஆராரோ ஆராரோ ஆராரடித்தாரோ ஆரடித்து நீயழுதாய் அஞ்சனக் கண் மைகரைய கண்ணுன கண்ணேஎன் கண்குழிந்த மாம்பழமே தின்னப் பழமேஎன் தெவிட்டாத செந்தேனே ஈச்சம் பழமேஎன் இனித்திருக்கும் தீங்கனியே வாழைக் கணியே.என் வரிக்கண் பலாச்சுளையே கண்ணுன கண்ணுற்குக் கண்ணுறு வாராமல் சுண்ணும்பு மஞ்சளுமாய் சுற்றியெறி கண்ணுற்கு கண்ணை அடித்தவர்யார் கற்பகத்தைத் தொட்டவர்யார் ஆராரோ ஆராரோ ஆராரடித்தாரோ ஆரடித்து நீயழுதாய் அடித்தாரைச் சொல்லிடுவாய் தாலாட்டுப் பாடலிலே மற்முென்றைப் பார்க்கலாம். குழந்தைக்கு மாமன் தாயின் சகோதரனல்லவா? அவனிடத் திலே தாய்க்கு ஒரு தனிப்பட்ட அன்பிருப்பது இயல்பு. ஆதலால் தாய் எப்பொழுதுமே மாமனுடைய பெருமையைப் பேசுவதில் மகிழ்ச்சியடைகிருள்.