பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

காற்றில் வந்த கவிதை

மாமன் குழந்தைக்குக் கொண்டுவந்த பரிசொன்றைக் கூறி ஒரு தாய் தாலாட்டுகிறாள்.

கண்ணான கண்ணுறங்கு
கான மயிலே உறங்கு
தூங்காத கண்ணுக்குத்
துரும்பு கிள்ளி மையெழுதி
மையெழுதிப் பொட்டெழுதி
ஒன்று லக்ஷம் தேரெழுதி
அஞ்சு கிளி எழுதி
ஆறுமுகத் தேர் எழுதி
கொஞ்சு கிழி அஞ்செழுதிக்
கொண்டுவந்தார் உன் மாமன்
கண்ணான கண்ணுறங்கு
கான மயிலே உறங்கு

ஆரடிச்சார் உன்னையிங்கே
அழுது வந்தாய் வாய் நோக
அடிச்சவரைச் சொல்லிடுவாய்
ஆக்கினைகள் செய்திடுவோம்
தொட்டவரைச் சொல்லியழு
தொழுவிலே போட்டுவைப்போம்
யாரும் அடிக்கவில்லை
எவருமே தீண்டவில்லை
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் தேன்வடிய
கண்ணான கண்ணுறங்கு
கான மயிலே உறங்கு