பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

பொன்னு மச்சான்

த்தை மகன் என்றால் அவனிடத்திலே தனிப்பட்ட அன்பிருப்பது இயல்பு. அத்தையும் மாமனும் வருகிறார்கள். கூடவே நிறையத் தின்பண்டங்கள் வருகின்றன. வேறு என்னென்னவோ பரிசுகள் அவர்களிடமிருந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

வீட்டிலே தினமும் கூடவே இருக்கின்ற தாயும் தந்தையும் பல கட்டுப்பாடுகள், ஒழுங்கு விதிகள், கடமைகள் ஏற்படுத்துகிறார்கள். எப்பொழுதாவது ஊரிலிருந்து வரும் அத்தையும் மாமனும் அப்படி விதிகள் ஏற்படுத்துவதில்லை. நாள்தோறும் செய்யவேண்டியவற்றைச் சற்று தளர்த்துவதற்கும் அவர்கள்! வருகை உதவியாக இருக்கின்றது. அந்த அத்தையிடத்திலும் மாமனிடத்திலும் தனிப்பட்ட அன்பு வளர்வது இயல்புதானே? அத்தை மகன் வருகிறான். புதிய அன்பும் வருகிறது. உடன் பிறந்தவர்களுக்குள்ளே வளர்கின்ற அன்பு ஒருவகை. அதற்கும் அத்தை மகனிடத்திலே வளர்கின்ற அன்புக்கும் வேறுபாடு உண்டு.