பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

காற்றில் வந்த கவிதை

ஏறாத மலையேறி

ழநி மலையிலே பக்தியோடு ஏறி நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் முருகப் பிரானைத் தொழுது அவனுடைய அருளைப் பெறுகிரு.ர்கள். அதிகாலையில் தொடங்கும் பக்தர்களின் கூட்டம் இரவு நேரம்வரை ஒய்வதில்லை

ஆண்டிலே எந்த மாதத்திலும் இந்தக் கூட்டம் குறையாது. வெய்யில் தகிக்கும்படியான அக்கினி நட்சத்திரம் வருகின்ற காலத்திலும்கூட முருகனைத் தொழுவதில் மக்களுக்குள்ள ஆர்வம் குறைவதில்லை. அந்தக் காலத்தில் தான் பழநியிலே கூட்டம் அதிகம்.

சித்திரை மாதக் கடைசியிலும் வைகாசித் தொடக்கத்திலும் அக்கினி நட்சத்திரம் வருகின்றது. அப்பொழுதுதான் கதிரவனின் உக்கிரம் உச்சநிலையை அடைகிறது. அப்பொழுது தான் பழநியில் கூடுகின்ற மக்கட் கூட்டமும் மிக அதிகமாகிறது.